திட்டக்குடி : ஆவினங்குடி பி.எஸ்.வி., நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியானவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளியில் இலவச கல்வி பயில 25 சதவீதம் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி விண்ணப்பித்த மாணவர்களில், தகுதியானவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மங்களூர் வட்டார வளமைய பிரதிநிதி ஆசிரியர் சுரேஷ் முன்னிலையில், விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியான 39 பேர் குலுக்கலில் பங்கேற்றனர். இதில் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 24 இடங்களுக்கான மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி தாளாளர் கீதா செல்வன் மற்றும் பள்ளி ஆசிரியைகள், விண்ணப்பித்த மாணவர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.