ஸ்ரீபெரும்புதுார்: காஞ்சிபுரம் தாலுகா அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காஞ்சி செஸ் அகாடமிசார்பில், காஞ்சிபுரம் தாலுக்கா அளவிலான செஸ் போட்டி, விளக்கடிகோவில் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆண்களுக்கும், 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆண், பெண் என இருபாலருக்கும் போட்டி நடந்தது.
இதில், 49 பேர் பங்கேற்று விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டன.