ஆண்டிபட்டி, : வைகை அணை அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள் சாய்ந்து இரு கார்கள் சேதம் அடைந்தது.
வைகை அணை அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தது. மாலையில் வானில் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. வைகை அணை வலது கரை பூங்கா பகுதியில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து சுற்றுலா பயணிகள் நிறுத்தி வைத்திருந்த 2 கார்கள் மீது விழுந்ததில் கார்கள் சேதம் அடைந்தது. யாருக்கும் பாதிப்பு இல்லை. மரங்கள் சாய்ந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரோட்டில் சாய்ந்த மரங்களை தீயணைப்புத் துறையினர் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
மூன்று மணி நேரம் மின் வினியோகம் நிறுத்தப்பட்டதால் வைகை அணை சுற்று வட்டார பகுதிகள் இருளில் மூழ்கியது.