பந்தலுார்:பந்தலுார் ஹட்டி கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.
நெல்லியாளம் நகராட்சியில் உள்ளது பந்தலுார் ஹட்டி கிராமம். இங்கு, 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், கடந்த ஓராண்டுக்கு முன்னர், நகராட்சி மூலம் மீண்டும் கிணறு மற்றும் நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது, இரண்டு கிணறு இருந்த போதும் ஒரு குடும்பத்துக்கு நான்கு குடங்கள் மட்டுமே குடிநீர் பிடிக்க முடிகிறது.
நகராட்சி மூலம் லாரியில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஒரு பெண் மீது தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த பின் லாரியும் வருவதில்லை.
மக்கள் கூறுகையில், 'கிராமத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் இருந்தும் நகராட்சி நிர்வாகம் முறையாக 'சப்ளை' செய்யாததால், குடிநீர் கிடைக்காமல் அவதி படுகிறோம். உரிய நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.