திருத்தணி, சென்னை அடுத்துள்ள திருத்தணி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் உண்டியலில், 17 நாட்கள் செலுத்திய காணிக்கையை கோவில் துணை கமிஷனர் விஜயா முன்னிலையில், கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகளைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று எண்ணினர்.
இதில், 88 லட்சத்து, 9,332 ரூபாய், 338 கிராம் தங்கம், 6,252 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.