ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அரசு மானிய விலை டீசல் வழங்க நேற்று விசைப்படகுகளின் உறுதி தன்மையை மீன்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராமேஸ்வரம் பாம்பன் மண்டபத்தில் 1400 விசைப்படகுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததும் அரசின் மானிய விலை டீசல் வழங்க மீன்துறை அதிகாரிகள் படகுகளை ஆய்வு செய்வது வழக்கம்.
நேற்று ராமேஸ்வரம் பாம்பனில் உள்ள விசைப்படகுகளை மீன்துறை உதவி இயக்குனர் அப்துல்காதர் ஜெயிலானி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் அரசு நிர்ணயித்து உள்ள படகின் நீளம் அகலம் மற்றும் படகின் உறுதித் தன்மை இன்ஜின் குதிரை திறன் மீனவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தகுதியுள்ள நபர்களுக்கு அரசு மானியத்தில் டீசல் வழங்க பதிவேடு வழங்கப்படும்
விரைவில் நாட்டுப்படகளும் ஆய்வு செய்யப்படும் என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.