மாதவரம், வியாசர்பாடி அடுத்த எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் மகேஷ், 31; பழைய குற்றவாளி. இவர், 15ம் இரவு, மூலக்கடை மேம்பாலம் அருகே, ஆட்டோ ஓட்டுனர் திவாகர், 34, என்பவரிடம் தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கி தப்பி சென்றார்.
இது குறித்து, விசாரித்த மாதவரம் போலீசார், மகேஷை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை, மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் அருகே, போலீசாரிடம் மகேஷ் சிக்கினார். போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement