கோவை: பாரதியார் பல்கலை ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை உதவி பேராசிரியை அமுதா, மஞ்சள் இலையிலிருந்து சாயம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார். அவருக்கு, அதற்கான காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலை உதவி பேராசிரியை அமுதா, விவசாயம் தொடர்பான, 'அக்ரோ' கழிவுகளில் இருந்து சாயம் தயாரிக்கும், ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மஞ்சள் அறுவடைக்கு பின், கழிவாக கருதப்படும் இலைகளை பயன்படுத்தி, சாயம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, 2017ம் ஆண்டு காப்புரிமைக்கு விண்ணப்பித்திருந்தார். காப்புரிமை தற்போது கிடைத்துள்ளது.
உதவி பேராசிரியை அமுதா கூறியதாவது:
மஞ்சள் இலைகளை, அறுவடைக்கு பின் விவசாயிகள் எரித்து விடுகின்றனர். வீணாகும் இலைகளை பயன்படுத்தி, கோல்டன் மஞ்சள் என்ற சாயத்தை தயாரிக்கலாம். அதற்கான காப்புரிமை தற்போது கிடைத்துள்ளது. குச்சிக்கிழங்கு இலை மூலம் பச்சை சாயம் உருவாக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.