நகை பறிக்க முயற்சி
கொட்டாம்பட்டி: வேலாயுதம்பட்டி விவசாயி மலைச்சாமி 51, நேற்று முன்தினம் மாலை மனைவியுடன் வயல்வேலைக்கு சென்றார். தனியாக வீட்டில் இருந்த மலைச்சாமி மகள் பிரதீபாவிடம் 21, சொக்கம்பட்டி ஆண்டியப்பன் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்தது போல் நடித்து அவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை பறிக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த பிரதீபா சத்தம் போட்டார். அருகில் இருந்தவர்கள் வந்ததால் ஆண்டியப்பன் தப்பி ஓடினார். கொட்டாம்பட்டி எஸ்.ஐ., சோனைமுத்து விசாரிக்கிறார்.
கொலை வழக்கில் சரண்
திருமங்கலம்: மதுரை தெப்பக்குளம் போலீஸ் எல்லை பகுதியில் மே 19 ல் கார்த்திக் 20, என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ராமர் பாண்டியன் 37, கார்த்திக் 24, நிதிஷ்குமார் 24, தீபக் 23, உள்ளிட்ட 5 பேர் நேற்று திருமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சண்முக நாதன் முன்னிலையில் சரணடைந்தனர்.