புதுடில்லியில் புதிதாக கட்டப்பட்டுவந்த பாராளுமன்ற கட்டடம் மே 28ல் பிரதமர் மோடி திறக்க உள்ளதாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் ஒரு பகுதியாக,ரூ. 970 கோடியில், 65,000 ச.மீ பரப்பளவில் புதிய பாராளுமன்ற, கட்டடம் கட்டுவதற்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய பொதுப்பணித்துறை மேற்பார்வையில் டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் கட்டுமான பணியை மேற்கொண்டது. சுமார் ஆண்டுகளில் இந்த புதிய பாராளுமன்றம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
![]()
|
இதில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 300 உறுப்பினர்களும் தாராளமாக அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் நடக்கும் போது 1,280 உறுப்பினர்கள் வரை இதில் அமரலாம்.
இதில் ராஜபாதை (கடமைப்பாதை) சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக இருக்கும். இந்த புதிய கட்டடப் பணிகள் தற்போது முடிந்து திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில், வரும் மே 28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டடம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
![]()
|
இது குறித்து பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய பாராளுமன்ற கட்டடம் வரும் 28-ல் திறக்கப்படும். புதிய கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்றார். இந்த கட்டடத்தில் தான் வரும் ஜூலை மாதம் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
![]()
|
இந்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு தான் திறக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி திறக்க கூடாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தினங்களுக்கு தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு எதிர் கட்சிகளும் ஜனாதிபதி தான் புதிய பாராளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
தற்போது புதிய பாராளுமன்றம் திறக்க சில தினங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி திறந்து வைக்கும் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவை காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து #Parliment என்ற ஹேஷ் டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது. 99.2K பயனர்கள் ஆதரவாகவும், எதிராகவும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.