'நிஸான் இந்தியா' நிறுவனம், அதன் 'மேக்னைட்' கார் வரிசையில், 'கீஸா' என்ற சிறப்பு எடிஷன் காரை இந்தியாவில் களமிறக்கியுள்ளது.
சிறப்பு எடிஷன் காரான இதில், எந்தவித டிசைன் மாற்றங்களும் செய்யப்படவில்லை. குறிப்பாக, பிரீமியம் ஆடியோ மற்றும் இன்போடெயின்மென்ட் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது, 9 அங்குல டச் ஸ்கிரீன் அமைப்பு, ஆண்ட்ராய்டு கார்ப்ளே, பிரீமியம் ஜே.பி.எல்., ஸ்பீக்கர்கள், ரியர் கேமரா, செயலி மூலம் இயக்கும் வசதி கொண்ட வண்ண லைட்டுகள், சார்க் பின் ஆண்டெனா, சொகுசான பழுப்பு நிற லெதர் சீட்டுகள் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
நான்கு ஸ்டார் கிராஷ் டெஸ்ட் பெற்ற இந்த காரில், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் அமைப்பு உட்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. இந்த காரின் விலை, நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹார்ஸ் பவர் 71 பி.எஸ்.,டார்க் 96 என்.எம்.,