சிட்ரோன் சி3எக்ஸ் ஆன் தி வே...செடான் செக்மென்டில் களம் காண தயார்!

Updated : மே 24, 2023 | Added : மே 24, 2023 | |
Advertisement
சிட்ரோன் இந்தியா நிறுவனம் தனது நான்காவது படைப்பான சி3எக்ஸ் (Citroen C3X) செடான் மாடல் காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.இந்தியாவில், மிகவேகமாக வளர்ந்து வரும் வாகன உற்பத்தி நிறுவனமான சிட்ரோன், சி5 எஸ்யூவி மற்றும் சி3 ஹேட்ச்பேக் ரக கார்களை விற்பனைக்கு வழங்கி வருகிறது. இந்த இரண்டு கார்களுக்குமே போதுமான அளவு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு கிடைத்தது. சி3 மாடல்
Citroen C3X Crossover to Launch in India Soon?சிட்ரோன் சி3எக்ஸ் ஆன் தி வே...செடான் செக்மென்டில் களம் காண தயார்!

சிட்ரோன் இந்தியா நிறுவனம் தனது நான்காவது படைப்பான சி3எக்ஸ் (Citroen C3X) செடான் மாடல் காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தியாவில், மிகவேகமாக வளர்ந்து வரும் வாகன உற்பத்தி நிறுவனமான சிட்ரோன், சி5 எஸ்யூவி மற்றும் சி3 ஹேட்ச்பேக் ரக கார்களை விற்பனைக்கு வழங்கி வருகிறது. இந்த இரண்டு கார்களுக்குமே போதுமான அளவு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு கிடைத்தது. சி3 மாடல் ஏர்கிராஸ், ஷைன் என்ற இரு வேரியன்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல் தற்போது சிட்ரோன் சி3 மாடலில் எலெக்ட்ரிக் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தனது அடுத்த படைப்பான சி3எக்ஸ் (Citroen C3X) செடான் மாடல் காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.



latest tamil news


சி3எக்ஸ் மாடலில் சக்திவாய்ந்த 1.2L டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த காரின் தோற்றதை பொறுத்தவரை, கிராஸ்ஓவர் கார்களை போன்ற தோற்றத்தை பெற்றுள்ளது. ஆனால், முன்பக்கம் தற்போது விற்பனையில் இருக்கும் சிட்ரொன் சி3 மாடலைப்போலவே காட்சியளிக்கிறது.



latest tamil news


காரின் உள்பக்கம் சென்றால், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல், எலக்ட்ரிக் அட்ஜெஸ்மென்ட் இருக்கை மற்றும் HVAC கட்டுப்பாடுகள் என பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கலாம்.



latest tamil news


சமீபத்தில் வெளியான சி3 ஏர்கிராஸ் ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ள நிலையில், எலக்ட்ரிக் C3 ஏர்கிராஸ் 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம். அதேபோல், புதிய சி3எக்ஸ் கார் விற்பனைக்கு வருவதன்மூலம், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, வோக்ஸ்வாகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களுக்கு மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X