காஞ்சிபுரம்:தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தின் வளர்ச்சி, அரசு திட்டங்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து, அவ்வப்போது கலெக்டருடன், கண்காணிப்பு அலுவலர் ஆய்வு நடத்துவார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்ரமணியன் கண்காணிப்பு அலுவலராக இருந்தார்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மை செயலர் செந்தில்குமார், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலராக நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில்,கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கண்காணிப்பு அலுவலர் என முக்கிய உயரதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.