கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, வசந்தபஜார் வீதியில், ஞானவேல் முருகன் கோவிலுக்கு திரும்பும் இடத்தில் கோவில் குளம் அருகே அசோக மரம் உள்ளது.
அந்த மரத்தில், 20 அடி உயரத்தில், விஷ தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. 3 அடி உயரம், 4 அடி அகலம் உடைய கூட்டில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் உள்ளன.
அவ்வப்போது தேனீக்கள் கொட்டுவதால், அவ்வழியாக செல்லும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்கள், அப்பகுதி வணிகர்கள், அவ்வழியாக செல்லும் ரயில் பயணியரின் பாதுகாப்பு கருதி, உடனடியாக அந்த தேனீக்கள் கூட்டை அகற்ற வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.