திருவள்ளூர்:திருவள்ளூர் ஜே.என்.சாலை - ஆவடி புறவழிச்சாலை இணையும் பகுதி குறுகலாக இருப்பதால், அதை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்திற்கு அருகில் உள்ள காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
விரிவாக்க பணிக்கு, இடையூறாக காக்களூர் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து வீடுகள், திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் தலைமையில் நேற்று, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement