ஃபெராரி நிறுவனத்தின் 296 ஜிடிஎஸ் (Ferrari 296 GTS)கன்வெர்டிபிள் ஸ்போர்ட்ஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரீமியம் ரக ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற நிறுவனமான, ஃபெராரி அதிவேக கார்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாகும். உலகம் முழுவதும் பந்தையக் கார்களாகவும் ஃபெராரி நிறுவனத்தின் கார்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், விரைவில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் களமிறங்கவுள்ளது. இந்நிலையில், ஃபெராரி நிறுவனம் 296 GTS கன்வெர்டிபிள் ஸ்போர்ட்ஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
![]()
|
இந்த புதிய 296 ஜிடிஎஸ் கன்வெர்டிபிள் ஸ்போர்ட்ஸ் காரை பொறுத்தவரை, அதன் முந்தைய மாடலான 296 ஜிடிபி காரைப் போலவே என்ஜின் உட்பட அனைத்தும் ஒரே மாதிரியாக தெரிகிறது. இருப்பினும் இந்த 295 ஜிடிஎஸ் மாடலில், கன்வெர்டெபிள் பாடி அமைப்பினை கொண்டுள்ளது. இதில் உள்ள மேற்கூறை ஃபெராரி 296 ஜிடிஎஸ் கூரை 45 கிமீ வேகத்தில் திறக்க அல்லது மூடுவதற்கு வெறும் 14 வினாடிகள் ஆகும்.
![]()
|
மேலும், பெர்ஃபாமன்ஸ் பற்றி பார்க்கும் பொழுது இந்த கார், 6 சிலிண்டர் கொண்ட V6 என்ஜின் வசதி கொண்டுள்ளது. அதேபோல், 3.0 லிட்டர் V6 ஹைபிரிட் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதன் பவர் 654BHP ஆகும். இதனை கூடுதலாக இருக்கும் 164BHP எலக்ட்ரிக் மோட்டார் திறனுடன் இணைத்தால் 819BHP பவர் மற்றும் 740NM டார்க் திறனை வெளிப்படுத்தும். இதன் என்ஜின் உடன் 8 ஸ்பீட் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.
![]()
|
296 ஜிடிஎஸ் கார் 0 முதல் 100கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.9 வினாடிகளே போதுமானது. 296 ஜிடிஎஸ் 330கிமீ வேகத்தில் செல்லும். காரில் உள்ள மின்சார மோட்டார் கொண்டு 296 ஜிடிபி மாடலை போலவே 25 கிமீ பயணிக்கலாம். அதேபோல் இதன் உட்புறம் எந்த ஒரு நேரடி பட்டன் வசதிகளும் இடம்பெறவில்லை. முழு டச் கண்ட்ரோல் சிஸ்டம் மட்டுமே உள்ளது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதி, டச் ஸ்க்ரீன் கன்சோல், உள்ளிட்ட எக்கச்சக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஃபெராரி 296 ஜிடிஎஸ் கன்வெர்டிபிள் ஸ்போர்ட்ஸ் காரின் விலை ரூ.6.24 கோடி (எக்ஸ்ஷோரூம் விலை) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.