வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு பேருந்து வழித்தடம் மற்றும் காஞ்சிபுரம் - தாம்பரம் பேருந்து வழித்தடம் ஆகிய பல்வேறு வழித்தடங்கள் இணையும் பகுதியாக, வாலாஜாபாத் சதுக்க பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த நிறுத்தத்தில், பேருந்திற்கு காத்திருக்கும் பயணியருக்காக, நிழற்கூரையுடன் கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிழற்கூரை கட்டடத்தின் மீது விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், பேருந்திற்கு நீண்ட நேரம் காத்து இருக்கும் பயணியர், வெயிலுக்கு ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் இடையூறுடன் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.