பொள்ளாச்சி : பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவரின் பொருளாதார முன்னேற்றத்துக்காக, தொழில் முன்னோடிகள் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம், அதிகபட்சமாக, 1.50 கோடி ரூபாய் மானியமாகவும், 6 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படுகிறது. உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகபட்ச வயது வரம்பு - 55. கல்வி தகுதி தேவையில்லை. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வாயிலாக தொழில் முனைவோர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன், www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான தேர்வு குழு வாயிலாக விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதி அடிப்படையில், வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். இணைப்பு பாலமாக, மாவட்ட தொழில் மையம் செயல்படும்.