ஐரோப்பாவின் ஏர்பஸ் விமான நிறுவனம், அண்மையில் ஒரு தானோட்டி ஹெலிகாப்டரை வெற்றிகரமாக சோதித்திருக்கிறது. வி.எஸ்.ஆர்.,700 என்ற அந்த குட்டி ஹெலிகாப்டர், ஆளின்றி கடல் மேல் பறந்து, ஒரு கப்பலின் மேல் தளத்தில் இறங்கவும், மேலே பறக்கவும் செய்தது.
இந்த சோதனைகளின்போது, காற்று சூறாவளியாக வீச, மழையும் பெய்தது. ஆனாலும், துளியும் பிசகாமல், ஏர்பஸ்ஸின் தானோட்டி ஹெலிகாப்டர் தளத்தின் மேல் இறங்கவும், மேலே டேக்-ஆப் ஆகவும் செய்தது.
சிறிய போர்க்கப்பல்களில் இது போன்ற குட்டி தானோட்டி ஹெலிகாப்டர்கள் உதவும். சில மைல்கள் தொலைவுக்கு கண்காணிப்புக்கு அனுப்பவும், வேவு பார்க்கவும், தேவைப்பட்டால் சிறிய குண்டுகளை வீசி தாக்கவும், ஏர்பஸ் ஹெலிகாப்டரால் முடியும்.