எவ்வளவு பெரிய மடிக்கணினியாக இருந்தாலும், அதனுடன் வரும் திரை, நம் தேவைக்குக் குறைவான அளவிலேயே இருக்கும். இந்தக் குறையைப் போக்க, 'சைட்புல்' நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிஉள்ள தீர்வு மிகவும் அழகானது.
ஆக்மென்டெட் ரியாலிட்டி எனப்படும், மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பத்திற்கு பயன்படும் கண் கண்ணாடியை அணிபவருக்கு, சற்றுத் தள்ளி, 100 அங்குல டிஜிட்டல் திரை இருப்பதுபோன்ற பிம்பம் தெரியும்.
இந்த பிம்பத்தினுள், நீங்கள் மடிக்கணினியில் செய்யும் வேலைகளைப் பார்த்துக்கொள்ளலாம். இந்த திரை, மெய்நிகர் கண்ணாடியை அணிபவருக்கு மட்டுமே தெரியும்.
எனவே, விமானம், நெரிசல் மிக்க பொது இடங்கள் என்று எங்கும் இந்த டிஜிட்டல் மடிக்கணினித் திரையைப் பார்த்து நீங்கள் வேலை செய்ய முடியும்.