நமது சூரியக் குடும்பத்தில் அதிக நிலவுகளைக் கொண்டது கோளாக வியாழன் இருந்தது. ஆனால், தற்போதைய கணக்குகளின்படி, அந்த இடத்தை சனி கிரகம் தட்டிப்பறித்துள்ளது. அதாவது, புதிய கண்டுபிடிப்பின்படி மட்டும், சனி கிரகத்திற்கு 62 புதிய நிலவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே முந்தைய கணக்கையும் சேர்த்தால், சனிக் கோளுக்கு இப்போது 145 நிலவுகளைத் தொட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள், கடந்த சில ஆண்டுகளாக சனிக் கோள் பயணிக்கும் பாதையில் தொடர்ந்து படங்களை எடுத்து, கணினியில் அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிப் பார்த்தபோது, இத்தனை புதிய நிலவுகள் இருப்பது தெரியவந்தது.
கடந்த சில ஆண்டுகளாக வியாழன் கோள், 79 என்ற அளவில் அதிக நிலவுகளைக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது சனி முந்தியிருக்கிறது. இந்த எண்ணிக்கையும் கூட, அடுத்தடுத்த விண்ணோக்கி ஆய்வுகளில் மாறக்கூடும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.