எலக்ட்ரானிக் ஸ்கின் எனப்படும் மின்னணு தோலை உருவாக்கும் ஆராய்ச்சி வேகமெடுத்துள்ளது. இந்த செயற்கைத் தோல், 'தொடு உணர்வை'க் கொண்டது. மிக மெல்லிய பொருளால் செய்யப்பட்ட தோல் போன்ற அமைப்பைத் தொட்டால், அந்த தொடுதலின் அழுத்தம் மற்றும் வெப்ப மாறுபாடுகளை மின்னணு தோல் உணர்ந்து, அந்த உணர்வை மின்னணு சமிக்ஞையாக மாற்றுகிறது.
மின்னணு தோலை, ஒரு எலியின் மூளையுடன் விஞ்ஞானிகள் இணைத்து ஆராய்ச்சி செய்தனர் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை விஞ்ஞானிகள். மின்னணு தோலைத் விரலால் தொட்டபோது, மின்னணு சமிக்ஞை பாய, யாரோ விரலால் அழுத்தியதுபோல உணர்ந்த எலி, தன் கால்களை அசைத்தது. இதுபோன்ற மின்னணு தோலை, செயற்கை கால் மற்றும் கைகளை அணிந்துள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.