பார்லி., க்கு செங்கோல்  பெருமிதமான நிகழ்வு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பார்லி., க்கு செங்கோல் பெருமிதமான நிகழ்வு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பார்லி., க்கு செங்கோல் பெருமிதமான நிகழ்வு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Updated : மே 25, 2023 | Added : மே 25, 2023 | கருத்துகள் (40) | |
Advertisement
சென்னை: பார்லி., வளாகத்திற்கு தமிழகத்தில் இருந்து செங்கோல் கொண்டு செல்வது பெருமிதமான நிகழ்வு என்றும், இந்த செங்கோல் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கூறினார்.புதிய பார்லிமென்டில் நிறுவப்படும் செங்கோல் தொடர்பாக சென்னையில், கவர்னர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களை

சென்னை: பார்லி., வளாகத்திற்கு தமிழகத்தில் இருந்து செங்கோல் கொண்டு செல்வது பெருமிதமான நிகழ்வு என்றும், இந்த செங்கோல் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கூறினார்.




latest tamil news

புதிய பார்லிமென்டில் நிறுவப்படும் செங்கோல் தொடர்பாக சென்னையில், கவர்னர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கவர்னர்கள் ரவி, தமிழிசை, இல.கணேசன், மத்திய அமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தனர்.



நிதி அமைச்சர் நிர்மலா மேலும் கூறியதாவது:

பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவுக்கு தமிழகத்தை சேர்ந்த 20 ஆதினங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் குறிக்கிறது. ஆட்சி மாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் நடைமுறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது. செங்கோலை தயாரித்த உமமிடி பெரியோர்களை பிரதமர் மோடி கவுரவிக்க உள்ளார். புதிய பார்லிமென்ட் கட்டடத்தை கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் மரியாதை செய்யப்பட உள்ளது.


செங்கோல் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள இணையதளத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். 1947 ஆக., 14 ல் ஆதினங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோல், பிறகு பிரயாகராஜ்( அலகாபாத்) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த விஷயம் அனைவருக்கும் தெரியவில்லை. அதை தேட வேண்டியதாகிவிட்டது.


1978 ல் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகா பெரியவர், செங்கோல் குறித்து பேசிய போது, மக்கள் கவனத்திற்கு வந்தது. மீடியாவிலும் அதிகம் பேசி உள்ளனர்.



அரசியல் செய்ய ஒன்றும் இல்லை


2021 பிப்., மாதத்தில் வந்த கட்டுரை, பிரதமர் மோடிக்கு மொழி பெயர்த்து அனுப்பி வைக்கப்பட்டது. அது குறித்து சிலரை பிரதமர் அணுகினார். அவர்கள் தேடிய போது, செங்கோல் பிரயாக்ராஜ் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது.



latest tamil news


1978ல் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், காஞ்சி மடத்தில் மகா பெரியவர் பேசிய போது அந்த விஷயம் மக்கள் கவனத்திற்கு வந்தது 1978 ல் விவரமாக மீடியாவில் பேசியுள்ளர்.


செங்கோல் நிறுவவதில் அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை. தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கும் பெருமிதமான நிகழ்ச்சி இது. அதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கம் பெருமிதமான நிகழ்ச்சி இது. இங்கு அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அடுத்த 100 ஆண்டுகளுக்கான பெருமைக்கு உரிய சின்னமாக புதிய பார்லிமென்ட் கட்டடம் இருக்க போகிறது.


மக்கள் பிரச்னைகள் பற்றி பேசப்போகிற சபையை புறக்கணிக்க போகிறோமா ? இது ஜனநாயகத்தின் கோயில். 2014 ல் எம்.பி.,யாக வெற்றி பெற்றதும் பிரதமர் மோடி, பார்லிமென்ட் படிக்கட்டில் சிரம் தாழ்த்தி வணங்கி, வணக்கம் தெரிவித்து உள்ளே போனார். மக்கள் பிரச்னைகள் பற்றி பேசப்போகும் புறக்கணிக்கும் நிகழ்வு நல்லதல்ல என தாழ்மையான கருத்து. மக்களுக்காக, எதிர்க்கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும்.



தமிழகத்திற்கு கவுரவம்


2014 பிரதமர் எம்.பி., ஆக வரும் போது, படிக்கட்டில் சிரம் தாழ்த்தி, அந்த கோயிலுக்கு வணக்கம் தெரிவித்து உள்ளே போனார். அனைவரும் தங்களது நிலைப்பாட்டை மீண்டும் யோசித்து, மக்களுக்காக பங்கேற்க வேண்டும். ஜனநாயகத்தின் கோயிலான பார்லிமென்ட் திறக்கும் விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் பார்லிமென்ட்டிற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும். இது தமிழகத்திற்கு கவுரவமான பெருமிதமான விஷயம்.


லோக்சபா செயலாளர் மூலமாக, சபாநாயகர் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பிதழ் சென்றுள்ளது. அது முறையல்ல வேறு எதுவும் எதிர்பார்க்கின்றனரா என தெரியவில்லை. ஜனாதிபதி பதவியை மிகவும் உயர்வாக கருதுகிறோம். அது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல.

சோழர்கள், பல்லவர்கள், சேரர்கள், பாண்டியர்கள் காலத்தில் பதவி பரிமாற்றம் நடக்கும் போது, குருமார்கள் ஆசிர்வாதம் கொடுத்து செங்கோல் அளிப்பார்கள்.


மதுரை மீனாட்சி அம்மன் கையில், பங்குனி உற்சவத்தின் போது கூட செங்கோல் அளிப்பார்கள். இது நமது பாரம்பரியம். கலாசாரம் தான். சத்தீஸ்கர், தெலுங்கானா மாநில சட்டசபை திறப்பின் போது கவர்னரை ஏன் அழைக்கவில்லை? சத்தீஸ்கரில் சட்டசபை திறந்து வைத்த சோனியா என்ன கவர்னரா?


புதிய பார்லிமென்டில், லோக்சபாவில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. எந்தவிதமான மத அடையாளமும் இல்லாமல் மரபு ரீதியாக செங்கோல் வைக்கப்படுகிறது. ஒரு தலைபட்சமாக இல்லாமல், அனைவருக்குமான ஆட்சியாக நடத்த செங்கோல் உதவும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.



ஆவணப்படம்


செங்கோல் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, செங்கோல் வரலாறு, உருவாக்கப்பட்டது உள்ளிட்ட பல விஷயங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (40)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25-மே-202320:59:33 IST Report Abuse
Ramesh Sargam தமிழகத்தில் இருந்து ஒரு செங்கல்லையும் புதிய பாராளுமன்றத்திற்கு கொடுக்க மாட்டோம் என்று வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள ஸ்டாலின் கூறினாலும் அதில் வியப்பில்லை. செங்கோலுக்கும், செங்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாது இந்த திராவிட குழுமத்திற்கு.
Rate this:
Cancel
GANESUN - Chennai,இந்தியா
25-மே-202320:05:44 IST Report Abuse
GANESUN உ.நிதி எங்களுக்கு செங்கல் தெரியும்.. செங்கோல்ன்னா?
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
25-மே-202319:51:43 IST Report Abuse
venugopal s தமிழகத்தில் இருந்து செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவுவது பெருமைக்குரிய விஷயம் தான்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X