'ரூ.2,000 மட்டும் போதும்': மாத்தி யோசித்த டில்லி நிறுவனம்!

Updated : மே 25, 2023 | Added : மே 25, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறும் முடிவை, சமயோசிதமாக பயன்படுத்தி தனது விற்பனையை அதிகரிக்க டில்லி இறைச்சி விற்பனை நிறுவனம், விளம்பரம் செய்திருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.மே 19ம் தேதி புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்.,30 வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து
Only Rs. 2,000 is enough: Delhi trader who thought of it.  'ரூ.2,000 மட்டும் போதும்': மாத்தி யோசித்த டில்லி நிறுவனம்!


புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறும் முடிவை, சமயோசிதமாக பயன்படுத்தி தனது விற்பனையை அதிகரிக்க டில்லி இறைச்சி விற்பனை நிறுவனம், விளம்பரம் செய்திருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மே 19ம் தேதி புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்.,30 வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து ஒருமுறைக்கு ரூ.20 ஆயிரம் அளவுக்கு பொதுமக்கள் மாற்றி கொள்ளலாமென அறிவித்துள்ளது. இருப்பினும், மக்கள் சிலர் எப்படியாவது தங்களிடம் உள்ள நோட்டை மாற்ற முயற்சித்து வருகின்றனர்.


சமீபத்தில், உ.பி.,யில் உள்ள பெட்ரோல் பங்க்கில், 2,000 ரூபாய் நோட்டை அளித்தவரின் வாகனத்தில் இருந்து பெட்ரோலைமீண்டும் உறிஞ்சி எடுத்த நிகழ்வு நடந்தேறியது.


இந்நிலையில், டில்லியை சேர்ந்த இறைச்சி விற்பனை நிறுவனம் ஒன்று, விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கையாக ரூ.2,000 மட்டும் செலுத்தி, ரூ.2,100 மதிப்புள்ள இறைச்சி வகைகளை பெற்று செல்லலாமென சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


latest tamil news

இதனை சுமித் அகர்வால் என்பவர் , 'ரிசர்வ் வங்கி புத்திசாலி என்று நீங்கள் நினைத்தால், டில்லிவாசிகள் மிகவும் புத்திசாலிகள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். விற்பனையை அதிகரிக்க என்ன ஒரு புதுமையான வழி! என புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டார். இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கு நெட்டிசன் ஒருவர், 'பிசினஸ் சென்ஸ் என்பது வாய்ப்புக்களை தன் வசமாக்கி கொள்வது தானே' என பதிவிட்டார். மற்றொரு நெட்டிசன், 'விற்பனையை அதிகரிக்க உண்மையில் செம்ம ஐடியா' என பதிவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

VasikaraJeeva - AlAin,ஐக்கிய அரபு நாடுகள்
25-மே-202321:55:44 IST Report Abuse
VasikaraJeeva super ji .. super .. super
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-மே-202315:53:40 IST Report Abuse
duruvasar உடன்பிறப்புகள் இதைவிட கெட்டிக்காரர்கள். உடன்பிறப்புகள் , சக உடன்பிறப்புகளை பெயிலில் எடுக்க லட்சக்கணக்கில் பிணைத்தொகை கட்டி வெளியே கொண்டுவந்துவிடுவார்கள்
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
25-மே-202315:38:57 IST Report Abuse
Cheran Perumal அரசியல்வாதிகளுக்கு 2000 நோட்டை மாற்றிக்கொடுக்கும் ஆளாகக்கூட இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X