கொஞ்சம் அசால்டாக இருந்தாலும் ஆபத்தை தரும் இந்த உணவுப்பொருட்கள் !

Updated : மே 25, 2023 | Added : மே 25, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
உணவு என்பது வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது. ஆரோக்கியமான உணவுகள் அனைத்தும் நன்மையை மட்டுமே அளிப்பதில்லை. ஒரு சில நேரங்களில் பிடித்தமான உணவுகள் ஆபத்தையும் அளிக்கின்றன. உடலுக்கு தீங்கு அளிக்கக்கூடிய நஞ்சுத் தன்மைகள் ஒரு சில உணவுகளில் உள்ளன. அதேவேளையில், இந்த குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்ட உடனேயே உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், எதிர்பாராத
These foods are dangerous even if they you are a little careless கொஞ்சம் அசால்டாக இருந்தாலும் ஆபத்தை தரும் இந்த உணவுப்பொருட்கள் !

உணவு என்பது வாழ்வின் முக்கிய அங்கமாக உள்ளது. ஆரோக்கியமான உணவுகள் அனைத்தும் நன்மையை மட்டுமே அளிப்பதில்லை. ஒரு சில நேரங்களில் பிடித்தமான உணவுகள் ஆபத்தையும் அளிக்கின்றன. உடலுக்கு தீங்கு அளிக்கக்கூடிய நஞ்சுத் தன்மைகள் ஒரு சில உணவுகளில் உள்ளன. அதேவேளையில், இந்த குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்ட உடனேயே உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், எதிர்பாராத பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உஷாராக இருக்க வேண்டியுள்ளது. எனவே, ஆபத்தை தரக்கூடிய உணவு வகைகள் குறித்து பார்க்கலாம்...


உருளைக்கிழங்கு


latest tamil news

பலருக்கும் பிடித்தமான பட்டியலில் உள்ள உருளைக்கிழங்கு கூட ஆபத்தை விளைவிக்கிறது. இது ஆச்சர்யமாகக்கூட இருக்கலாம். ஆனால், உருளைக்கிழங்கின் தண்டு மற்றும் இலைகளில் நச்சுத்தன்மைகள் உள்ளன. மேலும், உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால் அதில், கிளைகோல்கலாய்டு எனும் நஞ்சு நிறைந்திருக்கும். இது ஆபத்தானது


தக்காளி


latest tamil news

Advertisement

கிச்சனில் தினசரி பயன்பாட்டில் தக்காளி முக்கிய அங்கமாக உள்ளது. தக்காளி இல்லாவிட்டால் சமையலே சிறக்காது. ஆனால், அதன் தண்டு மற்றும் இலைகளில் உள்ள கிளைகோல்கலாய்டு என்ற விஷம், நம் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பது பலருக்கும் சரிவர தெரியாது. எதிர்பாராவிதமாக தண்டு, இலையை சாப்பிட நேர்ந்தால், நரம்புத்தளர்ச்சி, வயிற்று உப்புசம் ஏற்படக்கூடும்;


ஆப்பிள் விதைகள்


latest tamil news

பொதுவாக விதைகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், ஒரு சில விதைகள் அதற்கு நேரெதிராக உள்ளன. இந்த பட்டியலில் ஆப்பிள் விதைகள் உள்ளன. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும். ஆனால், ஆப்பிள் விதைகளையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும். ஆப்பிள் விதைகளில் சயனைடை உருவாக்கும் அமிக்டலின் என்ற கலவை உள்ளது. எனவே, இந்த விதைகளை சாப்பிடும்போது தலைச்சுற்றல், வாந்தி, ரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும்.


காளான்


latest tamil news

சைவ உணவுகளின் விருப்பப்பட்டியலில் தவறாமல் இடம் பெறுபவை காளான்; பலருக்கும் பிடித்தமானது. இந்த காளானில் ஏராளமான வகைகள் உள்ளன. அதில், ஒருசில காளான்களில் (வெப்கேப்கள், கோனோசைப் ஃபிலாரிஸ் ) இயற்கையாகவே நச்சுத்தன்மைகள் நிறைந்துள்ளன. எனவே, சரியான காளான்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.விளக்கெண்ணெய்


latest tamil news

உடலில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக விளக்கெண்ணெய் உள்ளது. ஆனால், இதை தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு விதையில் ஆபத்து ஒளிந்துள்ளது.


பாதாம்


latest tamil news

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பாதாம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. அதேவேளையில், ஆபத்தையும் விளைவிக்கும் தன்மை எனவே, அப்படியே பாதாமை சாப்பிடுவதை விட, தண்ணீரில் ஊற வைத்து தோலை நீக்கியோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

Dhandapani - Madurai,இந்தியா
26-மே-202308:18:33 IST Report Abuse
Dhandapani சோறு திங்கலாமா வேண்டாமா, அதில் என்னகுறை உள்ளது சார்
Rate this:
Kumar Senthil - Raleigh,யூ.எஸ்.ஏ
28-மே-202300:57:13 IST Report Abuse
Kumar Senthilவைட் ரைஸ் அதிக கார்போஹைட்ரெட் இருக்கிறது. அது சுகர் உண்டாகும். ரைஸ் குறைத்து முழு தானிய உணவை எடுக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X