ரூ.7,000 கோடி திரட்டியுள்ள போன்பே: கடன் வழங்கும் தொழிலில் இறங்குகிறது

Updated : மே 25, 2023 | Added : மே 25, 2023 | |
Advertisement
இந்திய டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான போன்பே சமீபத்தில் ஜெனரல் அட்லான்டிக் மற்றும் அதன் இணை முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 800 கோடி ரூபாயை திரட்டியது. இதன் மூலம் போன்பே இந்த ஆண்டு திரட்டிய மொத்தப் பணம் ரூ.7,000 கோடியாக உயர்ந்துள்ளது. கூகுள் பே, பேடிஎம் போன்று டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான போன்பே, பிலிப்கார்ட்டின் முன்னாள் நிர்வாகிகளான நிகம், ராகுல் சாரி மற்றும்
Ponpay Raises Rs 7,000 Crore: The Lending Industry Takes Off  ரூ.7,000 கோடி திரட்டியுள்ள போன்பே: கடன் வழங்கும் தொழிலில் இறங்குகிறது

இந்திய டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான போன்பே சமீபத்தில் ஜெனரல் அட்லான்டிக் மற்றும் அதன் இணை முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 800 கோடி ரூபாயை திரட்டியது. இதன் மூலம் போன்பே இந்த ஆண்டு திரட்டிய மொத்தப் பணம் ரூ.7,000 கோடியாக உயர்ந்துள்ளது.

கூகுள் பே, பேடிஎம் போன்று டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான போன்பே, பிலிப்கார்ட்டின் முன்னாள் நிர்வாகிகளான நிகம், ராகுல் சாரி மற்றும் பர்சின் ஆகியோரால் 2015ல் துவங்கப்பட்டது. நிதி தொழில்நுட்ப நிறுவனமான போன்பேவுக்கு 40 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். மேலும் யுபிஐ., எனும் யூனிபைட் பேமென்ட்ஸ் இன்டர்பேஸ் பரிவர்த்தனை சந்தையில் போன்பே தான் முன்னணியில் உள்ளது. மாதாந்திர யு.பி.ஐ., பரிவர்த்தனை அளவின் அடிப்படையில், போன்பே 47 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.


latest tamil news


இந்நிறுவனம் 2017ல் நிதிச் சேவைகள் வழங்கும் நிறுவனமாக விரிவடைந்தது. தனது வாடிக்கையாளர்கள் போன்பேவை பயன்படுத்தி தங்கம், காப்பீடு மற்றும் மியூச்சுவல் பண்ட்களை வாங்க வசதி செய்தது. மேலும் அனைத்து கட்டணங்களையும் செலுத்தும் வசதியையும் கொண்டு வந்தது. போன்பே டிசம்பரில் பிலிப்கார்ட்டிலிருந்து வெளியேறி முழு இந்திய தனி நிறுவனமானது. அதனைத் தொடர்ந்து நிதி திரட்டலில் ஈடுபடுகிறது.

2023 ஜனவரியில், போன்பே ரூ.8,200 கோடியை முதலீட்டாளர்களிடமிருந்து தவணைகளில் திரட்டுவதாக அறிவித்தது. இதற்காக நிறுவனம் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்புடையதாக கருதப்பட்டது. ஜனவரியிலிருந்து இதுவரை ரூ.7,000 கோடி திரட்டியுள்ளது. இலக்கை நெருங்குகிறது. ஜெனரல் அட்லாண்டிக் முதலீட்டு நிறுவனமிடமிருந்து ரூ.4,500 கோடி, அதன் மிகப்பெரிய பங்குதாரரான வால்மார்ட்டிடமிருந்து ரூ.1,600 கோடியும் திரட்டியுள்ளது. மேலும் டைகர் குளோபல், ரிப்பிட் கேபிடல் மற்றும் டிவிஎஸ் கேபிட்டலிடமிருந்து ரூ.820 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.


latest tamil news


நிறுவனம் இந்த நிதியை கொண்டு காப்பீட்டு மற்றும் பேமென்ட்ஸ் தொழில்களை விரிவுப்படுத்த உள்ளது. மேலும் கடன் வழங்குவது, பங்குத் தரகு தொழில், ஓ.என்.டி.சி., போன்ற புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும் இந்த நிதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏப்ரலில், போன்பே பின்கோட் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இது ஓ.என்.டி.சி.,யின் ஒரு அங்கமாக இணைந்துள்ளது. இந்த செயலி மூலம் நமது பகுதியில் உள்ள கடைகளில் ஷாப்பிங் செய்யலாம். மளிகை பொருட்கள், உணவு, மருந்துகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பலவற்றை உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்வார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X