புதுடில்லி: நாட்டின் வளர்ச்சியில் ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆராய்ச்சி செய்யாத வரை, புதிய தொழில்நுட்பத்தை நம்மால் கண்டுப்பிடிக்க முடியாது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.

டில்லியில் நடந்த மாநாட்டில் விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:

எந்தவொரு நாட்டின் வளர்ச்சியிலும் ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆராய்ச்சி செய்யாத வரை, புதிய தொழில்நுட்பத்தை நம்மால் கண்டுப்பிடிக்க முடியாது. பொருளாதாரம், அரசியல், சமூகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இன்று ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் அதிக பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.