கோவை: மளிகை கடை உரிமம் புதுப்பித்தலுக்கு ரூ. 7ஆயிரம் லஞ்சம் பெற்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேசை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்..
கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த நவாவூர் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவர் தனது மளிகை கடை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து இருந்தார். அப்போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வெங்கடேஷ் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதையடுத்து துரைசாமி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் துரைசாமி ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெங்கடேஷிடம் வழங்கினார். அப்போது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.