ஹியூமனாய்டு ரோபோக்களுக்கு மனிதர்கள் போலவே கைகள், கால்கள், தலை, உடல் இருக்கும். ஐந்தடி எட்டு இன்ச் உயரம் கொண்ட 'ஆப்டிமஸ்' எனும் பெயர்கொண்ட ஹியூமனாய்டு ரோபோவை அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா கடந்த 2021 ஆம் ஆண்டு உருவாக்கியது. இந்த ஹியூமனாய்டு ரோபோவின் முகத்தில் ஓர் எல்இடி திரை பொருத்தப்பட்டுள்ளது.
ஆப்டிமஸ் 57 கிலோ கிராம் எடை கொண்டது. ஆட்டோபைலட் டிரைவர் அசிஸ்டன்ட் மென்பொருள் இந்த ரோபோவில் பதியப்பட்டு உள்ளது. அசிமோ உள்ளிட்ட பல பிரபல ஹியூமனாய்டு ரோபோக்கள் உலகில் உள்ள போதும் டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பான இந்த ரோபோ தனித்தன்மையுடன் விளங்குகிறது.
நமது ஸ்மார்ட்போன்களில் உள்ளதுபோல எல்டிஇ கனெக்ஷன், 2.3 கிலோவாட் பேட்டரி, வைஃபை உள்ளிட்டவை இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ளன. டெஸ்லாவின் எஸ்ஓசி இயங்குதளத்தில் இந்த ரோபோ உருவாகியுள்ளது. இந்திய மதிப்புப்படி 16 லட்ச ரூபாய் விலை கொண்ட இந்த ஆப்டிமஸ் ரோபோ விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது என நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த ரோபோவில் மேலும் பலவித அப்டேட்டுகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
![]()
|
இந்த ரோபோ மனிதர்கள்போல வேகமாக நடக்காவிட்டாலும் மெதுவாக நடந்து வீட்டு வேலைகளைச் செய்யக்கூடியவை. ரோபாட்டிக்ஸ் துறை கடந்த சில ஆண்டுகளாக அதீத வளர்ச்சிகண்டு வருவதையடுத்து இந்த ரோபோவின் வேகம் மேலும் அதிகரிக்கும், செயல்திறன் பன்மடங்கு மேம்படுமென நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.