நமது முன்னோர்கள் உடல் வலிமை மிகுந்தவர்களாக ஆரோக்கியமாக இருந்ததற்கு, அவர்களின் உடலுழைப்பும், உணவு முறையும் முக்கிய காரணம். பிரதான உணவு தானியமாக அரிசி மாறும்வரை, அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, பிரதான உணவுகளில் ஒன்றாக களி இருந்து வந்தது. இவற்றின் பயன்கள் என்ன, இதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
கேப்பைக்களி
![]()
|
கேழ்வரகு, ராகி, கேப்பை என வெவ்வேறு பெயர்கள் இதற்கு உண்டு. கேப்பைக் களியை செய்வது மிகச் சுலபம். இதில் கால்சியம் சத்து அதிகம். எனவே, வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்களுக்கு ஏற்ற உணவு.
கேப்பைக்களி உடல் வெப்பத்தை தணித்து, பசியை குறைக்கும். கோடைகாலத்தில் காலை உணவாக அல்லது மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்துள்ள கேப்பை களி சக்தியை அதிகரிக்கவும், குடல் புண்களை ஆற்றவும் சிறந்தது.
செய்முறை: முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து, தேவையான அளவு கேப்பை மாவை அதில் சேர்த்து கிளற வேண்டும். சிறிது உப்பு சேர்த்து, கட்டி பிடிக்காதவாறு தொடர்ந்து கைவிடாமல் கிளற வேண்டும். பின்னர் கெட்டியாக வந்தபின் இறக்கி, இதனுடன் வெல்லம், கருப்பட்டி, தேங்காய் துண்டு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். கடைந்த கீரை, பாட்டுக் காய்கறிகளில் புளிக் குழம்பு, வேர்க்கடலை துவையல் போன்றவை களிக்கு கலக்கலான காம்பினேஷன்கள்.
.
உளுந்தங்களி
![]()
|
உளுந்தங்களியில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின், தாது உப்புகள் ஆகியவை உள்ளன.
இதை சாப்பிடுவதால் இடுப்பு எலும்பு வலுப் பெறும், பருவமடைந்த பெண்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது.
உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்கள் வாரம் ஒருமுறை இதை சாப்பிட்டு வரலாம்.
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு அரிசி மாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கொதித்த உடன் 6 கைப்பிடி கருப்பட்டி, 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிண்டி, அத்துடன் கடைசியாக 5 கைப்பிடி உளுந்து மாவை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறி பரிமாறலாம்.
வெந்தயக்களி
![]()
|
உடலுக்கு வலிமை சேர்க்கும், செரிமானம் சீராகும், வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவற்றை குணமாக்கும்.