புதுடில்லி: வரும் பார்லி., தேர்தலில் பா.ஜ., 300 இடங்கள் வரை வெற்றி பெற்று 3 -வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது: புதிய பார்லி., கட்டடம் திறப்பு விழாவை புறக்கணித்து காங்., அரசியல் செய்கிறது. 2024 ல் நடைபெற உள்ள பார்லி., லோக்சபா தேர்தலில் பா.ஜ.,300 இடங்கள் வரை வெற்றி பெறும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார். அத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தற்போது பெற்றுள்ள எண்ணிக்கையை விட குறைந்த இடங்களையே பெறும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.