சென்னை: தமிழகத்தில் இன்று (25 ம் தேதி) 17 நகரங்களில் வெயில் சதம் அடித்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்களுக்கு வெப்ப காற்று வீசக்கூடும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இன்று (25 ம் தேதி) தமிழகத்தில் சென்னை , மதுரை உள்ளிட்ட 17 நகரங்களில் வெயில் சதம் அடித்தது. அதன்விபரம் வருமாறு:
சென்னை மீனம்பாக்கம் ,திருத்தணியில் 105.44, வேலூர், மதுரை நகரம் மதுரை விமான நிலையம் தலா 104, நுங்கம்பாக்கம், திருச்சியில் 103, தஞ்சை , பாளையங்கோட்டை , பரங்கி பேட்டையில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது.