புதுடில்லி : சி.பி.ஐ., எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனராக, கர்நாடக முன்னாள் டி.ஜி.பி., பிரவீன் சூட் பதவியேற்றார்.
சி.பி.ஐ., அமைப்பின் இயக்குனராக, பதவி வகித்து வந்த, கபோத் குமார் ஜெய்ஸ்வால் பதவி காலம், இன்று (மே.,25)ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து, ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக, இரண்டு ஆண்டு காலம், அந்த பதவிக்கு, புதிய இயக்குனராக, கர்நாடகாவின், முன்னாள் டி.ஜி.பி., பிரவீன் சூட் தேர்வு செய்யப்பட்டார்.
அவர், இன்று பதவியேற்று கொண்டார். 1986ம் ஆண்டு, ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், மொரீசியஸ் அரசின் ஆலோசகர் உட்பட, பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.