கூடலூர்: ஊட்டி பைக்கார அருகே உள்ள, கிராமத்தைச் சேர்ந்த, 9ம் வகுப்பு படித்து வந்த 14 வயது பழங்குடி சிறுமியை, கடந்த ஏப்., 24ல், ரஜ்னேஷ் குட்டன், 25, என்பவர், காரில் அழைத்துச் சென்று, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்தார்.
பைக்காரா போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும், 17 வயது சிறுமி, திருமணம் செய்தது குறித்த புகாரை தொடர்ந்து, கூடலூர் அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது கோக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், அவரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு நீலகிரி எஸ்.பி., பிரபாகர் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, அவரை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட கலெக்டர் அமரீத் உத்தரவிட்டார். தொடர்ந்து, ரஜ்னேஷ் குட்டன் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.