மப்பேடு:ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகாமி, 45, தேவி, 45, கலைவாணி, 40, மனோகரன், 48 , கஜலட்சுமி,40, பூங்கொடி, 50. இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், வார சந்தையில் கடை போட்டனர். நேற்று முன்தினம் இரவு ஷேர் ஆட்டோவில் தக்கோலம் திரும்பினர்.
காஞ்சிபுரம், புதுகேசவபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.
புதுப்பட்டு அருகே வரும்போது, ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த தேவி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சிவகாமி சந்தவேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
ஆட்டோ டிரைவர் செல்வம் உட்பட ஐந்து பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.