வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் அலுவலக இல்ல நுழைவு கேட் மீது மர்ம கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரில் எண்: 10 டவுனிங் தெருவில் உள்ளது.இங்குள்ள ஒயிட் ஹால் என்ற பகுதியின் நுழைவு வாயிலின் முதலாவது கேட் மீது மர்ம கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்து போலீசார் மோதிய காரை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் கூறுகையில், கார் மோதிய முதலாவது கேட் பகுதி பிரதமர் ரிஷி சுனாக் தன் குடும்பத்தினருடன் வசித்து வரும் பகுதியாகும். கைதான நபர் குறித்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றனர்.