ஹெலோ கேமர்ஸ் 'கெட் ரெடி'; நவம்பரில் வரும் சோனியின் கையடக்க பிளே-ஸ்டேஷன்!

Updated : மே 25, 2023 | Added : மே 25, 2023 | |
Advertisement
சோனி நிறுவனம் கையடக்க பிளே ஸ்டேஷன் (Sony PlayStation handheld) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.பிரபல டெக் நிறுவனமான சோனி, டிவி, டிஜிட்டல் கேமராக்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹெட்போன்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப கருவிகளை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக அதன் கேமிங் பிராண்டான ப்ளே ஸ்டேஷன் , அது சார்ந்த கன்சோல்கள் மற்றும் அக்ஸசரிஸ்கள் தயாரிப்பில் மிகவும் புகழ்பெற்று
Sonys PlayStation handheld reportedly arriving in Novemberஹெலோ கேமர்ஸ் 'கெட் ரெடி';  நவம்பரில் வரும் சோனியின்  கையடக்க பிளே-ஸ்டேஷன்!

சோனி நிறுவனம் கையடக்க பிளே ஸ்டேஷன் (Sony PlayStation handheld) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

பிரபல டெக் நிறுவனமான சோனி, டிவி, டிஜிட்டல் கேமராக்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹெட்போன்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப கருவிகளை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக அதன் கேமிங் பிராண்டான ப்ளே ஸ்டேஷன் , அது சார்ந்த கன்சோல்கள் மற்றும் அக்ஸசரிஸ்கள் தயாரிப்பில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த வரிசையில் அதன் ப்ளே ஸ்டேஷன் 5 கன்சோல்கள் விற்பனையில் அசத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது சோனி நிறுவனம் “பிராஜக்ட் கியூ” திட்டத்தின் கீழ் கையடக்க பிளே ஸ்டேஷன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.



latest tamil news


பிளே ஸ்டேஷன் ஷோகேஸ் நிகழ்வில் புதிய சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த கையடக்க பிளே ஸ்டேஷன் மூலம் பிளே ஸ்டேஷன் 5 கேம்களின் அக்சஸபிலிட்டியை மேம்படுத்த முடியும். அதேபோல், பிளே ஸ்டேஷன் 5 கன்சோலில் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்களை மட்டுமே புதிய கியூ சாதனத்தில் விளையாட முடியும். அதுமட்டுமல்லாமல், இது, தனித்துவம் மிக்க கேமிங் சாதனமாக இல்லாமல், இது பிளே ஸ்டேஷன் 5 உடன் வழங்கப்படும் சாதனமாக இருக்கும் என்றே தெரிகிறது.



latest tamil news


மேலும், பிராஜக்ட் கியூ சாதனத்தில் 1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60fps-இல் கேம்களை வைபை மூலம் இயக்கும் திறன் கொண்ட எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. அதோடு, அடாப்டிவ் ட்ரிகர்கள், ஹேப்டிக் ஃபீட்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



latest tamil news


இதுதவிர, சோனியின் புகழ்பெற்ற கிளவுட் கேமிங் வசதி பிராஜக்ட் கியூ சாதனத்திலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த சாதனம் கேம் ஸ்டிரீமிங் மற்றும் கிளவுட் கேமிங் சேவைகளை சப்போர்ட் செய்யாது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X