உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், இ-சேவை மைய பணியாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
அரசு கேபிள் 'டிவி', கூட்டுறவு சங்கம், மகளிர் குழு, கிராமப்புற தொழில் முனைவோரால் நடத்தப்படும் மையங்கள், என, 350 இ-சேவை மையத்தினர் பங்கேற்றனர்.
மாவட்ட மின் ஆளுமை முகமை மேலாளர் முத்துக்குமார் பேசியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், ஏற்கனவே 350 இ-சேவை மையங்கள் உள்ளன. புதிதாக, 550 மையங்கள் செயல்பாட்டை துவக்க உள்ளன.
வழங்கப்படும் சேவை, கட்டண விவரம், எந்தெந்த சான்றுக்கு என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு 'பேனர்' வைக்க வேண்டும். சான்றுகளுக்கு விண்ணப்பிக்க, பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை சரிபார்க்க என, தனித்தனியாக இரு கம்ப்யூட்டர் பயன்படுத்த வேண்டும். இதனால், பதிவு செய்யப்படும் விபரங்களை மக்கள் எளிதில் சரிபார்த்து கொள்வர். எழுத்துப்பிழை உள்ளிட்ட தவறு தவிர்க்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.