உடுமலை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சீருடைகள், சரியான அளவுகளில் வழங்க வேண்டும் என, பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உடுமலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகள் வடிவமைப்பதற்கு, அளவுகள் கேட்கப்படுகிறது. குறிப்பாக, 1 முதல், 4ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு வரை, என மூன்று பிரிவுகளில், அவர்களின் வயதுக்கு ஏற்ப சராசரியாக சீருடைகள் வடிவமைக்கப்படுகிறது.
கல்வியாண்டின் துவக்கம், நவ., டிச., மாதங்களில், தலா இரண்டு செட் சீருடைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பலருக்கு, சரியான அளவீடு இல்லாத காரணத்தால், சரிவர அணிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது.
பெற்றோர் கூறியதாவது: ஒவ்வொரு வகுப்பிலும், வெவ்வேறு உடல் அமைப்பு கொண்ட மாணவர்கள் உள்ளனர். அதனால், வயது, வகுப்புக்கு ஏற்ப சீருடைகள் தயாரித்தால், அவற்றை பயன்படுத்த முடியாது.
மாணவர்களுக்கு பொருத்தமான சீருடை கிடைப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளைப் போல், 'டெய்லர்' வாயிலாக அளவீடு செய்து, சீருடைகள் தைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.