கூடலுார்: கூடலுாரில் மூன்று தனியார் பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
கூடலுாரில், 72 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி புனித தாமஸ் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஆர்.டி.ஓ., முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி., செல்வராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் வாகனங்களை ஆய்வு செய்தனர். ஆய்வில் மூன்று வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது. 12 பள்ளி வாகனங்கள் சிறிய குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்து, வாகனங்களை, 30ம் தேதி மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக, கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், தீயை பாதுகாப்பாக கட்டுப்படுத்துவது குறித்து, ஓட்டுனர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.