மலிவு விலையில் ஹார்லி டேவிட்சன் பைக்; ஆர்.இ.,- க்கு காத்திருக்கும் பலத்த அடி!

Updated : மே 25, 2023 | Added : மே 25, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
ஹார்லி டேவிட்சன் (Harley-Davidson) - ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) கூட்டணியில் உருவாக்கப்பட்ட முதல் மலிவு விலை ஹார்லி டேவிட்சன் பைக் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.பிரபல ப்ரீமியம் ரக பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவின் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் இணைந்து ஹார்லி டேவிட்சன் பைக்கை தயாரித்து வருகிறது. முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த புதுமுக பைக் மலிவு
New Harley-Davidson X440 roadster India launch details revealed!மலிவு விலையில் ஹார்லி டேவிட்சன் பைக்; ஆர்.இ.,- க்கு காத்திருக்கும் பலத்த அடி!

ஹார்லி டேவிட்சன் (Harley-Davidson) - ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) கூட்டணியில் உருவாக்கப்பட்ட முதல் மலிவு விலை ஹார்லி டேவிட்சன் பைக் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.பிரபல ப்ரீமியம் ரக பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவின் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் இணைந்து ஹார்லி டேவிட்சன் பைக்கை தயாரித்து வருகிறது. முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த புதுமுக பைக் மலிவு விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதுவரை ப்ரீமியம் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்து வந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முதல் முதலாக மிக குறைவான விலையில் இந்தியாவில் இந்த பைக்கை அறிமுகப்படுத்த உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை எகிரச்செய்துள்ளது.latest tamil news


பிரபல பைக் மாடலான பழைய எக்ஸ்ஆர் ரோட்ஸ்டர் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இந்த புதுமுக பைக் ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 (X440) என்று அழைக்கப்படுகிறது. இது ஓர் 440 சிசி மோட்டார் ஆகும். இந்த பைக்கில் ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 25-30 பிஎச்பி பவர் மற்றும் 30 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும் என தெரிகிறது.latest tamil news


அதேபோல், சதுர வடிவிலான ஃப்யூயல் டேங்க், அலாய் வீல் மற்றும் வட்ட வடிவ ஹெட்லைட், தட்டையான ஹேண்டில்பார், சியாட் ஜூம் க்ரஸ் ரப்பர் டயர் (CEAT Zoom Cruz rubber), டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட முன் மற்றும் பின் பக்க வீலில் டிஸ்க்குகள் என முற்றிலும் ஸ்டைலிஷான பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஃபூட் பெக்குகள் மையப் பகுதியில் இடம் பெற்றுள்ளன. வழக்கமாக க்ரூஸர் ரக பைக்குகளில் முன்னோக்கிய ஃபூட் பெக்குகளும், ஸ்வெப்ட் பேக் ஹேண்டில்பாரும் வழங்கப்பட்டிருக்கும்.latest tamil news


அதேபோல், ரைடர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும் விதமாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக எக்கச்சக்க ப்ரீமியம் தர தொழில்நுட்ப அம்சங்களும் இந்த ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கில் வழங்கப்பட இருக்கிறது. இந்த பைக்கை 2.5 லட்சம் - ரூ. 3 லட்சம் என்கிற மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.latest tamil news


குறிப்பாக இந்த மலிவு விலை ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் வருகை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

Sathish - Erode,இந்தியா
31-மே-202311:18:54 IST Report Abuse
Sathish வண்டியின் பேர்பார்மன்ஸ் நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் டிசைன் மிக மிக சுமார் ரகம். இவ்வளவு பணம் செலவு செய்து வாங்கினால் பார்க்கவும் கொஞ்சம் நன்றாக இருக்கனும். இந்த கம்பனி வண்டிகள் மைலேஜ் மிகவும் குறைவாகவும் இருக்கும் என்பதையும் கவனித்தால் நன்று
Rate this:
Cancel
Thamilarasu - Chengalpattu,இந்தியா
28-மே-202319:02:11 IST Report Abuse
Thamilarasu Royal Enfield is the 121 years old company. It has many such competitors. Still it is ruling middle cc segments (above 250 cc). Recent launches, hunter, Super Meteor, well accepted in the market. They are improving all the aspects in their journey. That's why able to face all such competitors
Rate this:
Cancel
Ford - Chennai,இந்தியா
28-மே-202306:18:59 IST Report Abuse
Ford TVS எப்படி BMW பைக்கை விட்டதோ அந்த மாதிரியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X