'சவாலுக்கு சவால் விடுவேன்!': பிரதமர் கோபம்

Updated : மே 25, 2023 | Added : மே 25, 2023 | கருத்துகள் (43+ 45) | |
Advertisement
புதுடில்லி : மூன்று நாடுகள் பயணத்தை முடித்து திரும்பிய பிரதமர் மோடிக்கு, புதுடில்லியில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ள எதிர்க்கட்சிகளின் திட்டத்தை விளாசித் தள்ளினார். ''நமக்கு சில சவால்கள் உள்ளன. ஆனால், சவால்களுக்கே சவால் விடுப்பது என் குணம். அதனால், இந்த அரசு எந்த சவாலையும் சந்திக்கத்
I will challenge the challenge!: Prime Minister angry   'சவாலுக்கு சவால் விடுவேன்!': பிரதமர் கோபம்

புதுடில்லி : மூன்று நாடுகள் பயணத்தை முடித்து திரும்பிய பிரதமர் மோடிக்கு, புதுடில்லியில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ள எதிர்க்கட்சிகளின் திட்டத்தை விளாசித் தள்ளினார். ''நமக்கு சில சவால்கள் உள்ளன. ஆனால், சவால்களுக்கே சவால் விடுப்பது என் குணம். அதனால், இந்த அரசு எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளது,'' என, அவர் குறிப்பிட்டார்.

கிழக்காசிய நாடான ஜப்பான், பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து அவர் நேற்று காலை புதுடில்லிக்கு வந்து சேர்ந்தார்.

இதற்கிடையே, பார்லிமென்ட் புதிய வளாகத்தை பிரதமர் மோடி நாளை மறுதினம் திறந்து வைப்பதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, விழாவை புறக்கணிப்பதாக கூறியுள்ளன.

இந்நிலையில், புதுடில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினர் குறித்து நேரடியாக குறிப்பிடாமல், அங்கு குழுமியிருந்த பா.ஜ.,வினர் இடையே பேசியதாவது:

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடந்தது.

இந்நிகழ்ச்சியில், அந்த நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், அந்நாட்டின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதுதான், ஜனநாயகத்தின் ஆன்மா மற்றும் வலிமை. இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் கட்சி பாகுபாடு இல்லாமல் அவர்கள் பங்கேற்றது, நமக்கு கிடைத்த கவுரவம்.

வெளிநாடுகளில் நான் மிகவும் தன்னம்பிக்கையுடனும், உறுதியுடனும் பேசுவதற்கு காரணம், நம் நாட்டு மக்கள் பெரும்பான்மை அரசை தேர்வு செய்திருப்பது தான். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், 140 கோடி மக்களின் குரல் என்பதை உலகத் தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.

நான் உலக நாடுகளுக்கு சென்றபோது, கொரோனா தடுப்பூசி கொடுத்ததற்காக நமக்கு நன்றியை தெரிவித்தனர். ஆனால், கொரோனா தடுப்பூசியை ஏன் மற்ற நாடுகளுக்கு தர வேண்டும் என, இங்கே சிலர் கேள்வி எழுப்பினர்.

இது, புத்தர், காந்தி பிறந்த நாடு. நாம், நம் எதிரிகளுக்கும் நன்மை செய்யக்கூடியவர்கள். பரிவு என்பது நம்முடைய அடையாளம். இந்தியாவின் குரலை உலக நாடுகள் கேட்கின்றன. நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், பெருமைகள் குறித்து பேசுவதற்கு நாம் தயங்க வேண்டியதில்லை. நாம் அடிமை மனப்பான்மையில் இருந்து வெளியே வர வேண்டும்.

நமக்கு சில சவால்கள் உள்ளன. ஆனால், சவால்களுக்கே சவால் விடுப்பது என்னுடைய குணம். இந்த அரசு, எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியின் பயணத்துக்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து பேசினர்.


வெளுத்து வாங்கிய மோடி



முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ள உத்தரகண்டுக்கு,
முதல் வந்தே பாரத் ரயில் சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. புதுடில்லியில் இருந்து டேராடூன் வரையிலான இந்த ரயில் சேவையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்த நுாற்றாண்டில் நம் உள்கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துவதன் வாயிலாக, இந்தியா உலக அரங்கில் சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியும். ஆனால், நம் நாட்டில் இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள், ஊழல், மோசடி செய்வதிலேயே கவனம் செலுத்தினர். தங்களுடைய வாரிசுகளை வளர்ப்பதை மட்டுமே நோக்கமாக வைத்திருந்தனர்.

உத்தரகண்டில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்கு, 5,000 கோடி ரூபாய் தேவை. இதுவே, 2014க்கு முன் செய்திருந்தால், 200 கோடி ரூபாயில் செய்திருக்கலாம்.

முதல் முறையாக, இந்நாட்டில், உண்மையான நோக்கம், திட்டம், அர்ப்பணிப்புடன் செயல்படக் கூடிய அரசு அமைந்துள்ளது. வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கொரோனாவை எதிர்கொண்டதில் நம் நாட்டின் செயல்பாடுகளை, உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. இது, இந்தியா மீது உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


'காங்., கட்சியினர் தங்கள் மறதியால்மங்கப் போகின்றனர்'


புதிய பார்லி., கட்டடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், டில்லியில் நேற்று மத்திய நகர்ப்புற மேம்பாடு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:
புதிய பார்லி., கட்டடம், நம் நாட்டின் பெருமை மற்றும் கலாசாரம் சம்பந்தப்பட்டது. இதில், அரசியல் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், காங்., வேண்டுமென்றே இதை அரசியலாக்கப் பார்க்கிறது.
காங்., கட்சியினர் நேரில் சந்திக்கும்போது ஒன்றைப் பேசுகின்றனர். வெளியில் போனவுடன், தாங்கள் பேசியதை அப்படியே மாற்றி, வேறு ஒன்றை பேசுகின்றனர். அவர்களுக்கு ஞாபக மறதி இருப்பதாக உணர்கிறேன். இந்த மறதி காரணமாக, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கப் போகின்றனர்.
ஒரு வேளை, அவர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய பார்லி.,யை கட்டிஇருந்தால், அவர்கள் தான் அதை திறந்து வைத்திருப்பர். இப்போது, நாங்கள் ஆட்சிக்கு தலைமை தாங்குகிறோம். எனவே, நாங்கள் திறக்கிறோம். இதில் தவறில்லையே?இந்த வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் தள்ளி நின்றால், இந்தியா, இந்திய நாகரிகம், கலாசாரம், ஜனநாயகம் ஆகியவற்றிலிருந்தும் அவர்கள் தள்ளி நிற்கின்றனர் என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.



செங்கோல் இருக்கும்!'

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று அளித்த பேட்டி:வெள்ளையர் ஆட்சி முடிந்து, நம் மக்கள் கையில் நாடு தரப்பட்டதை தெரிவிப்பதற்காக, 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் செங்கோல் வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், சில ஆண்டுகளுக்கு முன் வரை கண்டறியப்படாமல், அலகாபாதில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்தது.இந்த செங்கோல் பற்றி, 1978ல் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பேசினார். இதைத் தொடர்ந்து, 2021ல் செங்கோல் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. இதை கண்டுபிடிக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் கடிதம் எழுதினார். இதையடுத்து, அலகாபாதின் ஆனந்த் பவன் அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் எடுத்து வரப்பட்டு, புதிய பார்லிமென்டில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்பட உள்ளது. நீதி மற்றும் நியாயமான ஆட்சியின் புனித சின்னம் தான் செங்கோல். புதிய பார்லி., கட்டடத்தில், செங்கோல் நிறுவப்படுவது தமிழகத்திற்கு பெருமை. இதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. அடுத்த 100 ஆண்டுகளுக்கு, நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்கப் போகிறது. தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்காகவாவது, புதிய பார்லி., திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும். இது ஜனநாயகத்தின் கோவில். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும், பார்லிமென்டுக்கு உரிய மரியாதையை அவர்கள் கொடுக்க வேண்டும்.



புதிய பார்லி.,யை ஜனாதிபதியை வைத்து திறக்கவில்லை என்று விவாதம் எழுகிறது. சமீபத்தில் சத்தீஸ்கரில் புதிய சட்டசபை கட்டடத்தை, காங்., முன்னாள் தலைவர் சோனியா திறந்து வைத்தார். தெலுங்கானாவில் சட்டசபை கட்டட திறப்பு விழாவுக்கு, அம்மாநில கவர்னர் தமிழிசை அழைக்கப்படவில்லை; முதல்வர் தான் திறந்தார். ஆனால், இப்போது மட்டும் விமர்சனம் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


மங்கப் போகின்றனர்'

புதிய பார்லி., கட்டடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், டில்லியில் நேற்று மத்திய நகர்ப்புற மேம்பாடு அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கூறியதாவது:புதிய பார்லி., கட்டடம், நம் நாட்டின் பெருமை மற்றும் கலாசாரம் சம்பந்தப்பட்டது. இதில், அரசியல் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், காங்., வேண்டுமென்றே இதை அரசியலாக்கப் பார்க்கிறது.காங்., கட்சியினர் நேரில் சந்திக்கும்போது ஒன்றைப் பேசுகின்றனர்.


வெளியில் போனவுடன், தாங்கள் பேசியதை அப்படியே மாற்றி, வேறு ஒன்றை பேசுகின்றனர். அவர்களுக்கு ஞாபக மறதி இருப்பதாக உணர்கிறேன். இந்த மறதி காரணமாக, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கப் போகின்றனர்.ஒரு வேளை, அவர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய பார்லி.,யை கட்டியிருந்தால், அவர்கள் தான் அதை திறந்து வைத்திருப்பர். இப்போது, நாங்கள் ஆட்சிக்கு தலைமை தாங்குகிறோம். எனவே, நாங்கள் திறக்கிறோம். இதில் தவறில்லையே?இந்த வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் தள்ளி நின்றால், இந்தியா, இந்திய நாகரிகம், கலாசாரம், ஜனநாயகம் ஆகியவற்றிலிருந்தும் அவர்கள் தள்ளி நிற்கின்றனர் என்று அர்த்தம்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (43+ 45)

Duruvan - Rishikesh,அன்டார்டிகா
26-மே-202322:38:49 IST Report Abuse
Duruvan No need to take so much efforts for tamilan. It is not worth. One quarter & chicken briyani is enough.
Rate this:
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
26-மே-202320:53:06 IST Report Abuse
Kalaiselvan Periasamy இந்த எதிர்கட்சியை சார்ந்தவர்களை மலத்தால் தான் அடிக்க வேண்டும் . எதையும் மதம் இனம் என்று பேசும் இந்த கீழ்தரமாவர்களை ஆதரிக்கும் மக்களையும் மீடியாக்களையும் என்னாவென்று என்று சொல்ல தெரியவில்லை . இவர்கள் செய்யும் கண்ராவிகளை பார்க்கும் பொது இந்தியர் என்றால் இப்படித்தான் என்று நினைக்க தோன்றுகிறது . மக்களே தயவு செய்து நீங்களும் இந்த படு முட்டாளான அரசியல்வாதிகள் செயல் படாதீர்கள் . இல்லையேல் நிச்சயமாக இந்தியா மற்றொரு இருந்த ஆப்பிரிக்க கன்டமாக மாறும் அவளை நிலை தோறும் . இன்றுவரை இந்தியா பல இன்னல்களை சந்தித்தாலும் இந்தியாவை அசைக்க முடியாததிற்கு காரணம் இறைவன் அருளே .
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
26-மே-202320:16:35 IST Report Abuse
venugopal s நீங்கள் சவால் விட்டு வாயால் வடை சுடுவதில் கைதேர்ந்தவர் என்பது தான் எங்களுக்கு நன்றாகவே தெரியுமே!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X