ராமநாதபுரம் : பரமக்குடி, ராமநாதபுரம், முதுகளத்துார், கடலாடி அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே 24 முதல் ஜூன் 7 வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஓராண்டு தொழிற்பிரிவுகளில் பற்ற வைப்பவர், கணினி இயக்குபவர், சூரிய மின்சக்திவியலாளர், தையல் தொழில் நுட்பம், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், மேனுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் ஆட்டோமேசன்.
ஈராண்டு தொழிற்பிரிவுகள்
கம்மியர் மோட்டார் வாகனம், பொருத்துநர், கடைசலர், மின்சார பணியாளர், கம்பியாள், பின்னலாடை தொழில்நுட்பவியலாளர், இயந்திர படவரைவாளர், கம்மியர் மின்னணுவியல், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர், இயந்திர வேலையாளர், அட்வான்ஸ்டு சி.என்.சி., மெஷினிங் டெக்னீசியன் ஆகிய பிரிவுகளுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணத்தொகையான ரூ.50 விண்ணப்பதாரர் டெபிட், கிரடிட் கார்ட், நெட் பேங்கிங், ஜி.பே., மூலம் செலுத்தலாம்.
எட்டாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 14 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்குரிய தொழிற்பிரிவிற்கு வயது வரம்பு இல்லை. மேலும் விபரங்களுக்கு பரமக்குடி 04564 - 231303, ராமநாதபுரம் 04567 - 231214, முதுகுளத்துார் 04576 - 222114, கடலாடி 63836 54943 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.