செஞ்சி,-செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் புதுப்பேட்டை ஊராட்சியில் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரகூட்டம் நடந்தது.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் குமார் துவக்க உரையாற்றினார். ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பழனி, பாலகிருஷ்ணன், செந்தில் முருகன், ஷேக் வாகித் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர், அமைச்சர் மஸ்தான், தலைமைக் கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் ஆகியோர் சாதனைகளை விளக்கி பேசினர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் முருகன், அவைத் தலைவர்கள் கல்யாண் குமார், ஆறுமுகம், வாசு, ஆவின் இயக்குனர் தாஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரசன்னா, ஊராட்சி தலைவர்கள் சுபா குமார், தாட்சயாணி, அனுசுயா மணிபாலன் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னாள் கிளைச் செயலாளர் கணபதி நன்றி கூறினார்.