திண்டிவனம்,-உத்தரபிரதேச மாநிலம், பர்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் லகான்சிங் மகன் ரோகித்சிங், 28; இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 10க்கு மேற்பட்டோர், திண்டிவனம், முருங்கம்பாக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குல்பி ஐஸ் விற்று வருகின்றனர்.
கடந்த 21ம் தேதி இரவு, ரோகித்சிங், சாப்பிட்டு விட்டு துாங்கியுள்ளார். மறுநாள் காலையில் பார்த்த போது, வீட்டிலுள்ள பரணையில் அவர் துாக்கு போட்டு இறந்தது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில், திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, ரோகித் சிங் சகோதாரர் மோகித் சிங் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.