செஞ்சி, மேல்களவாய் தக்ஷண காளி கோவில் நடந்தது.
செஞ்சி அடுத்த மேல்களவாய் கிராமத்தில் செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் தக்ஷண காளி மற்றும் மகா காளி கோவில் திருப்பணிகள் செய்து ஜீர்ணோதாரண கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது.
அதனையொட்டி, கடந்த 23ம் தேதி காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, மூல மந்திர பாராயணம், தத்துவார்ச்சனை, விசேஷ திரவிய யாகமும், 9:00 மணிக்கு நாடி சந்தானமும், 9:45 மணிக்கு மகா பூர்ணாகுதியும், தொடர்ந்து கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னாள் ஒன்றிய சேர்மன் ரங்கநாதன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், விழா குழு தலைவர் பகவான் உட்பட பலர் பங்கேற்றனர்.