திண்டிவனம்,-தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷகத்தையொட்டி பாலாலயம் நடந்தது.
இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடைபெற இருப்பதால் அதனையொட்டி பாலாலயம் நடந்தது. சுயம்பு விநாயகரைச் சுற்றி உள்ள கோபுரம், கொடிமரம், ஜோதிலிங்கம், நந்தி பகவான், தட்சணாமூர்த்திகளுக்கும், துர்க்கை அம்மன், நாகராஜர், எலி வாகனம், நந்தி வாகனம், யானை வாகனம், பலிபீடம் மற்றும் நவகிரகங்களுக்கு பாலாலயம், ஆகம விதிப்படி நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.