திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் நடராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை அனைத்து பகுதியிலும் சிறப்பாக கொண்டாடுவது, கட்சியில் புது உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தி, தொகுதிக்கு, 50 ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்ப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.