திருப்பூர்: கோவில் வழியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் போதியளவில் செய்யப்படவில்லை என்று பயணிகள் குற்றச்சாட்டாக உள்ளது. இச்சூழலில், பஸ் ஸ்டாண்டில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். கமிஷனர் பவன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.