சிறுபாக்கம், ;சிறுபாக்கம் துக்க நிகழ்ச்சிக்கு மின் விளக்கு பொருத்தும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார்.
சிறுபாக்கம் அடுத்த மங்களூரைச் சேர்ந்தவர் முருகன், 45. இவர் சவுண்ட் சர்வீஸ் வைத்திருந்தார். நேற்று முன்தினம் அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா இறந்த துக்க நிகழ்ச்சிக்கு, பந்தலுக்கு முருகன் மின்விளக்கு பொருத்தி கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார். அவரை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது பிரேதம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில், சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.